சினிமாவுலகில் டாப் ஹீரோக்கள் படங்கள் மற்றொரு ஹீரோக்களின் படங்களின் வசூலை முறியடிப்பது வழக்கம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலை அள்ளி புதிய சாதனை படைத்தது அதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் டான். இந்த படமும் 100 கோடியை அள்ளி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். அவரை தொடர்ந்து சமுத்திரக்கனி, எஸ். ஜே. சூர்யா, சிவாங்கி மற்றும் பலர் நடிகர் நடிகைகள் அசத்தி உள்ளனர். தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் படங்கள் 100 கோடி வசூலை அள்ளுவது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
இதன் மூலம் அஜித் விஜய் போன்ற டாப் ஹீரோக்களுக்கு நிகராக தற்போது சிவகார்த்திகேயனை வைத்து பேசி வருகின்றனர். 13 நாள் முடிவில் மட்டுமே 102 கோடி உலக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து டான் திரைப்படம் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வருவதால் இன்னும் சில கோடிகளை அள்ளி புதிய சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் வசூலை ஒரு சில முக்கிய இடங்களில் முந்தி உள்ளது சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம். எந்தெந்த இடங்களில் என்பது குறித்தும் தற்போது தகவல் கிடைத்துள்ளது. USA மற்றும் UK போன்ற இடங்களில் அஜித்தின் வலிமை படத்தின் வசூலை முந்தி உள்ளது டான் திரைப்படம்.