சினிமா உலகில் ஹீரோவாக நடிக்கும் ஒவ்வொருவரும் எந்த மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு நடிக்கின்றனர் அந்த வகையில் அஜித் ஆக்சன் படங்களில் நடிப்பது வழக்கம் விஜய் மாஸ் கலந்த கமர்சியல் படங்களில் நடிப்பது வழக்கம்.
அதுபோலவேதான் நடிகர் சிவகார்த்திகேயன் கமர்ஷியல் படங்களில் நடிப்பது வழக்கம். இவரது கமர்சியல் படங்களில் காமெடியும் செண்டிமெண்ட்டும் அதிகமாக இருப்பதால் அவரது படங்கள் வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகி டாக்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
அதனை தொடர்ந்து இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உடன் இணைந்து தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் டான். தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் வேட்டையை தொடர்ந்து நடத்தி வருகிறது இதுவரை தமிழகத்தில் மட்டும் 40 கோடி அள்ளி உள்ளது உலக அளவில் டான் படம் 60 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் பல்வேறு முக்கிய இடங்களில் புதிய சாதனையை படிக்கவும் ரெடியாக இருக்கிறது அதே சமயம் பல்வேறு இடங்களில் டாப் நடிகர்களின் படங்களின் வசூலை முறியடிக்கவும் ரெடியாக இருக்கிறது அப்படி ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது அண்மையில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் வலிமை.
இந்த படம் UK வில் சுமார் 410 k வசூல் செய்தது ஆனால் தற்போது அந்த சாதனையை முறியடிக்க ரெடியாக இருக்கிறது சிவகார்த்திகேயனின் டான் படம். வெறும் ஏழு நாட்கள் மட்டுமே இந்த நிலையில் 353 k வசூல் செய்துள்ளது வருகின்ற நாட்களில் நிச்சயமாக வலிமை படத்தின் வசூலை அங்கு முறியடிக்கும் என தெரியவருகிறது.