இமாலய வசூலை நோக்கி பயணிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.! 9 நாள் முடிவில் தமிழகத்தில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

don
don

சிவகார்த்திகேயன் கமர்சியல் படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் அதுதான் அவருக்கு பெரிதும் வெற்றியையும் பெற்றுக் கொடுக்கின்றன அந்த வகையில் இவர் நடிப்பில் உருவான மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம்,  டாக்டர், ரெமோ போன்ற படங்கள் வெற்றியை ருசித்தன.

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி தற்போது வெற்றியைக் கண்டு வரும் திரைப்படம் தான் டான். இந்தப் படத்தை அட்லியின் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபிச்சக்கரவர்த்தி மிக நேர்த்தியாக எடுத்திருந்தார் படம் வெளியாகி தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று கூடிக்கொண்டே இருக்கிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து பிரியங்கா அருள்மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி, சிவாங்கி  மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி சென்டிமென்ட் படமாக இருந்ததால் திரையரங்கில் கூட்டம் இன்றளவும் இந்த படத்திற்கு இருந்து வருகிறது.

இந்த படம் உலக அளவில் சுமார் 70 கோடிக்கு மேல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஒன்பது நாள் முடிவில் எவ்வளவு வசூல் ஆகியுள்ளது என்பது குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பார்கையில் ஒன்பது நாள் முடிவில் டான் படம் சுமார் 54 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து சிவகார்த்திகேயன் படங்கள் வசூல் வேட்டை நடத்துவதால் அவரது வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.