தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து உள்ளவர் சிவகார்த்திகேயன். இவரது திரைப்படங்கள் அனைத்தும் காமெடி கலந்த படமாக இருப்பதால் ரசிகர்கள் பலரும் அதனை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் எதிர்பாராத அளவு வெற்றி பெற்றதை தொடர்ந்து நேற்று சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த டான் திரைப்படம் அதிக திரையரங்கில் வெளியாகி அமோகமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த படத்தின் முதல் காட்சியை காண ரசிகர்கள் மிக விரைவிலேயே வந்து ஆவலுடன் எதிர்பார்த்து படத்தை கண்டு மகிழ்ந்தனர். மேலும் படத்தை பார்த்து வெளிவரும் ரசிகர்கள் பலரும் திரைப்படத்திற்கு நல்ல விமர்சனத்தை கூறி வருகின்றனர். படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்ஜே சூர்யா போன்ற பலரும் நடித்துள்ளனர்.
டான் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்து இளம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து இழுத்துள்ளார். மேலும் படம் முதல் நாளிலேயே நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்ற நிலையில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
அதன்படி உலக அளவில் டான் படம் முதல் நாள் வசூலில் 15 கோடியை பெற்று தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலில் 9 கோடியை ஈன்றது. இந்த நிலையில் சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் முதல் நாளில் 7 கோடி வசூலை பெற்ற நிலையில் தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் செய்த சாதனையை டான் திரைப்படம் முதல் நாள் வசூலில் முறியடித்துள்ளது.