தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் முதன்முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.
மேலும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பல்வேறு பிரபலங்கள் சினிமாவில் கலக்கி வருகிறார்கள் அந்த வகையில் சந்தானம் பிரியா பவானி சங்கர் சிவகார்த்திகேயன் என பலரை எடுத்துக்காட்டாக சொல்லலாம் ஆனால் இதில் சிவகார்த்திகேயன் கொஞ்சம் வித்தியாசம் தான்.
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அயராத உழைப்பு மற்றும் நடிப்பு திறன் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் தற்போது விஜய் அஜீத் என முன்னணி நடிகர்களுடன் போட்டி போடும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக அமைந்தது மட்டுமில்லாமல் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலில் வெளுத்து வாங்கியது.
இதனை தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கியுள்ள டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் மற்றும் எஸ்கே புரோடக்சன் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்து வருகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகனன் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்துள்ளது பலருக்கும் ஆர்வத்தை மூட்டி உள்ளது அந்த வகையில் இந்த திரைப்படம் 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது மட்டுமில்லாமல் இந்த வீடியோ சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை குவித்துள்ளது.