காமெடி கலந்த படங்கள் எப்போதுமே வெற்றியை ரசிக்கும் அதில் கொஞ்சம் சென்டிமென்ட் ஆக்ஷன் இருந்தால் போதும் அந்தப் படம் மாபெரும் வெற்றியை ருசிக்கும் அதை தொடர்ந்து செய்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
தொடர்ந்து இது போன்ற படங்களில் நடிப்பதால் அவரது படங்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் சிறப்பாக நடத்தி வருகின்றன. இதனால் குறைந்த திரைப்படங்களில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார் மேலும் தற்போது கமிட்டாகி நடித்து வரும் படங்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகவும் சிவகார்த்திகேயன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை செய்து அசத்தியது அதே சந்தோஷத்துடன் டான் படத்தில் நடித்தார் இந்த படமும் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படமும் 100 கோடியை பெற்று பாக்ஸ் ஆபீஸ் ஹிட் லிஸ்டில் இணையும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பீஸ்ட் திரைப்படம் வெளியான 3 நாட்களில் மட்டுமே சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழகத்தில் டான் இப்படத்தின் வசூல் சுமார் ரூ 30.75 கோடி வசூல் வேட்டை நடத்தியதாக தெரியவருகின்றன.
இந்த நிலையில் சென்னை ஏரியாவில் அண்மை காலமாக கேஜிஎப் திரைப்படம் தான் வார இறுதியில் நல்ல வசூல் செய்திருந்தது தற்போது அந்த சாதனையை டான் திரைப்படம் முறியடித்துள்ளது. வார இறுதியில் அதிக வசூலை பெற்று தற்போது நம்பர் 1 படமாக டான் இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.