தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தும் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படம் – உலகம் முழுவதும் எவ்வளவு கோடி அள்ளியது தெரியுமா.?

don
don

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ஆம் தேதியன்று அதிக திரையரங்குகளில் வெளியாகி கோலாகலமாக ஒளிபரப்பாகி வரும் படம் டான். இந்த படம் அட்லீயிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் முதன்முறையாக வெளிவந்த படம் டான் திரைப்படம்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சிவாங்கி போன்ற பல பிரபலங்களும் நடித்து அசத்தி உள்ளன. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்து ரசிகர்கள் கொண்டாடும் படி சிறப்பாக நடித்து அசத்தியுள்ளார்.

இந்த படம் வெளிவந்த முதல் நாளில் இருந்தே தற்போது வரை திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். மேலும் படத்தை பார்த்து வெளி வரும் ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை கூறிவருகின்றனர். இதனையடுத்து டான் படம் வசூலிலும் குறைச்சல் இல்லாமல் ஒவ்வொரு நாளும் அதிக வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் உலக அளவில் டான் திரைப்படம் எதிர்பாராத அளவு வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதன்படி இதுவரை டான் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 20 கோடி வசூலை பெற உலகம் முழுவதும் 32 கோடி வசூலை அள்ளி உள்ளதாம். கண்டிப்பாக நாளைக்கு இப்படம்  50 கோடியை தாண்டும் எனவும் கூறபடுகின்றனர்.

மேலும் இப்படியே டான் படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே சென்றால் 100 கோடி வசூலை அசால்டாக தாண்டி டாக்டர் படத்தின் வசூலையும் முறியடித்து விடும் எனவும் பாக்ஸ் ஆபீஸ் நிறுவனம் கணித்துள்ளது.