சமீப காலமாக சினிமா உலகில் அதிகம் இளம் இயக்குனர்களின் படங்களே கொடிகட்டி பறக்கின்றன. அந்தவகையில் லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்றவர்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ உடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபிசக்கரவர்த்தி.
முதல்முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் உடன் கைகோர்த்து டான் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார் தற்போது சினிமா உலகில் மக்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இந்த படத்தை பற்றி தான் பேசி வருகின்றனர் மேலும் படம் வெளிவந்து மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சிறந்து விளங்கி வருகின்றது.
இதற்கு முக்கிய காரணம் குறிப்பாக டான் படம் வெளிவந்த நாட்களில் மற்ற டாப் நடிகர்கள் படங்கள் எதுவும் வெளிவராததும் ஒரு காரணம் தான். சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து சிபிசக்கரவர்த்தி இயக்கிய முதல் படமே வெற்றி படமாக பாரி உள்ளதால் சிபி சக்கரவர்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்குமே இந்த படம் ஒரு முக்கிய படமாகப் பார்க்கப்படுகிறது.
இதனிடையில் படம் வெளிவந்து ஒவ்வொரு நாளும் அதிகளவு வசூல் வேட்டை நடத்தி வருகின்ற நிலையில் 11 நாள் முடிவில் டான் திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதனை சிவகார்த்திகேயன் மற்றும் அவரது ரசிகர்கள் கொண்டாடியதை அடுத்து சிவகார்த்திகேயன்.
இந்த வெற்றியை தனது அப்பாவிற்கு சமர்ப்பிப்பதாகவும் சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது வரை டான் திரைப்படம் உலக அளவில் 13 நாள் முடிவில் 102 கோடி வசூலை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதனால் படக்குழு மற்றும் சிவகார்த்திகேயன் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.