தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித், விஜய், ரஜினி போன்றவர்களின் திரைப்படங்கள் வெளி வருகிறது என்றால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பார்கள். முதல் நாள் காட்சிக்கு முன்னரே திரையரங்கில் கூட்டம் அலைமோதும் அவர்களைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனும் நடிக்க தொடங்கிய சில காலங்களிலேயே அசுர வளர்ச்சியை எட்டி உள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர் திரைப்படம் டாப் நடிகர்களுக்கு நிகராக நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக் குவித்தது. இதை தொடர்ந்து இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படம் அதிக திரையரங்கில் வெளியாகி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் முதல் நாள் காட்சிக்கு முன்பே ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் அலைமோதி வந்தன.
சிவகார்த்திகேயன் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து பட்டாசுகளை வெடித்து ரசிகர்கள் செம சந்தோசத்தில் கொண்டாடி வருகின்றனர் படத்தை பார்த்து வெளிவரும் ரசிகர்களும் பாசிட்டிவான விமர்சனத்தையே கொடுத்து வருகின்றன. சமீபத்தில் வெளியான வலிமை, பீஸ்ட் போன்ற திரைப்படங்கள் முதல் காட்சிக்கு பின்பு கலவையான விமர்சனத்தையே பெற்று வந்தன.
ஆனால் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்திற்கு பலரும் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். முன்பதிவு ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே டிக்கெட் அனைத்தும் புக் செய்து ஹவுஸ்ஃபுல் ஆகியது ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதற்கு முன் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கு தான் முதல் நாளில் இவ்வளவு ஆரவாரம் நடைபெற்றன.
அதேபோல் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருவதால் டாப் நடிகர்களையும் மிஞ்சும் அளவிற்கு உயர்ந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் மற்ற நடிகர்கள் படங்களின் வசூலை காட்டிலும் டான் திரைப்படம் பெரிய அளவு வசூல் வேட்டை நடத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றன.