மாஸ் கலந்த திரைப்படங்கள் எப்பொழுது சூப்பர்ஹிட் அடிப்பது வழக்கம் அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது காமெடி ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கதையை தேர்ந்தெடுத்த நடிப்பதால் அவரது படங்கள் சூப்பர் ஹிட் அடிக்கின்றன அதன் காரணமாகவே இவரது படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்துகிறது.
இதனால் தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் மேலும் ஒவ்வொரு படமும் வெற்றி பெறும்போது கணிசமாக தனது சம்பளத்தை உயர்த்த உதவும் வழக்கமாக வைத்துள்ளார் சொல்லப்போனால் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்திற்கு நடிக்க இப்போது 25 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இவர் கடைசியாக டாக்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த படம் 100 கோடி வசூல் பெற்றதை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் டான் இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளதால் நல்ல வசூல் வேட்டையும் கண்டு வருகிறது.
இரண்டு நாட்களில் மட்டுமே தமிழகத்தில் 20 கோடி வசூல் செய்து அசத்தியது. இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயன் டான் திரைப்படம் மூன்றாவது நாளிலும் நல்ல வசூல் வேட்டை கொண்டுள்ளது தமிழகத்தில் மட்டும் மூன்று நாட்களில் தான் படம் சுமார் 33 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து டான் படம் வசூல் வேட்டை நடத்தி வருவதால் வருகின்ற நாட்களில் தொடர்ந்து அதிக தொகையை கைப்பற்றி நிச்சயம் மிகப்பெரிய ஒரு பிரம்மாண்ட வசூலை அள்ளும் என படக்குழு திட்டமிட்டுள்ளது அதற்கு ஏற்றார் போல டான் படத்தை தொடர்ந்து எந்த ஒரு டாப் நடிகர் படமும் வராமல் இருப்பதால் டான் படத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது.