கடந்த மே 13ஆம் தேதியன்று சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்த படமாக அமையும்.
ஏனென்றால் அவரது படங்கள் அனைத்தும் காமெடி கலந்த படமாக இருப்பதால் அனைத்து தரப்பட்ட மக்களும் அவரது படங்களை ரசித்து பார்ப்பார்கள் அதனால் இவரது படத்தைக் காண திரையரங்கிற்கு குடும்பம் குடும்பமாக கூட்டம் அலைமோதி வருகிறது. இதற்கு முன் வெளிவந்த ரெமோ, ரஜினிமுருகன், டாக்டர் போன்ற திரைப்படங்களும்..
நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் டான் திரைப்படமும் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகின்றன. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, பிரியங்கா அருள் மோகன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர்.
படமும் கல்லூரி கலாட்டா காமெடி ஆக்சன் சென்டிமென்ட் போன்ற அனைத்தும் கலந்த கலவையான படமாக அமைந்துள்ளதால் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இந்த படம் 12 நாள் முடிவிலேயே உலகமெங்கும் 100 கோடி வசூலை பெற்ற நிலையில் தமிழகத்தில் தற்போது வரை டான் படத்தின் வசூல் 80 கோடியை தாண்டியுள்ளது.
அப்படி உலகம் எங்கும் இதுவரை டான் திரைப்படம் 116 கோடி வசூலை கடந்து சென்று கொண்டிருக்கிறது இதனால் இந்த படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் நல்ல லாபம் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகின்றன மேலும் அடுத்தடுத்த படங்கள் சிவகார்த்திகேயனை வைத்து தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.