சினிமா உலகில் காமெடி திரைப்படங்கள் மிகப் பெரிய வசூல் வேட்டையை அள்ளும் என்பதை அவ்வப்போது எடுத்து வைத்து வருகிறார் நெல்சன் திலீப் குமார். இவர் இயக்கத்தில் முதலில் கோலமாவு கோகிலா சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததை தொடர்ந்து டாக்டர் என்னும் திரைப்படத்தை எழுதி இயக்கி இருந்தார்.
இந்த திரைப்படம் முற்றிலுமாக ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் படம் முழுக்க முழுக்க காமெடி கதைகளையே பின்பற்றி இருந்தது இருப்பினும் படம் முழுவதும் சிறந்த காமெடிகள் படத்தை தூக்கி நிறுத்தின .
அதன் காரணமாக தற்போது திரையரங்கில் டாக்டர் திரைப்படத்தை பார்க்க மக்கள் அலை போல குவிகின்றனர். படத்தின் கதைக்கு ஏற்றவாறு இந்த திரைப்படத்தில் ஒவ்வொருவரும் சூப்பராக பின்னி பெடல் எடுத்து உள்ளனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன், இளவரசன், அருண் அலெக்சாண்டர், அர்ச்சனா, ரெடின் கிங்ஸ்லே, யோகி பாபு, வினய் என ஒவ்வொருவரும் சிறந்த பங்களிப்பை கொடுத்து அசத்தி உள்ளனர்.
அந்தக் காரணத்தினால்தான் இந்த திரைப்படம் இன்னும் ஓடிக் கொண்டிருப்பது ஒரு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது மேலும் படத்தை பார்த்த பிரபலங்களும் நல்லவிதமாகவே கமெண்டுகளை கொடுத்து வருவதால் இந்த திரைப் படத்திற்கான வரவேற்பு இன்னும் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது.
இந்த படம் இதுவரை 80 கோடிக்கு மேல் வசூல் செய்து பல படங்களை முறியடித்த நிலையில் தமிழ்நாட்டில் இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிய நிலையில் 36.43 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் புகழை இயற்றியுள்ளார் சிவகார்த்திகேயன்.