பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சிவகார்த்திகேயனின் “டாக்டர்” திரைப்படம்.! எந்த டிவி.? எந்த நேரம் தெரியுமா.? வெளியான சூப்பர் தகவல்.

doctor
doctor

இளம் இயக்குனர்கள் சமீபகாலமாக சூப்பர் ஹிட் படங்களை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் டாப் நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கி வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தளபதி விஜய்யை வைத்து “பீஸ்ட்” என்னும் திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

இந்த படத்திற்கு முன்பாக இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனை டாக்டர் என்னும் திரைப்படத்தை எடுத்து அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அண்மையில்தான் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றதால் மக்களை அலைப்போல திரையரங்க பக்கம் குவிந்து வருகின்றனர்.

மேலும் வசூல் ரீதியாகவும் நல்ல வசூல் வேட்டையை கண்டு வருகிறது டாக்டர் படக்குழு கூட இவ்வளவு வசூல் வருமா என கணக்கு போட்டு இருக்கிறது அந்த அளவிற்கு தற்போது மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது இந்த திரைப்படம் கிட்டத்தட்ட தற்போது வரை ரூ 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டையை நடத்தி விட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன.

மேலும் சிவகார்த்திகேயனின் கேரியரில் இந்த படம் பிளாக்பஸ்டர் படமாக  அமைந்துள்ளது வெறும் மூன்று வாரங்கள் மட்டுமே ஆனது அதற்குள்ளேயே இவ்வளவு பெரிய வசூல் என்பது மிகப்பெரிய ஒரு சாதனையாக சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பார்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் டாக்டர் திரைப்படம் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப போவதாக தகவல்கள் வெளிவருகின்றன.  இச்செய்தியை  அறிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மற்றும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.