இரண்டு OTT தளத்தில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் “டாக்டர்” படம் – எப்போ தெரியுமா.? வெளியான சூப்பர் செய்தி.

doctor
doctor

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் உருவாகி தற்போது வெற்றி நடை கண்டு வரும் திரைப்படம் டாக்டர். இந்த திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விமர்சன ரீதியாக தடை போட்டு கொண்டு போய்க் கொண்டிருக்கிறது.

வசூல் நிலவரம் அதே போல தான் இதுவரை இந்த திரைப்படம் 90 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி போய்க்கொண்டிருக்கிறது இன்னும் ஓரிரு நாட்களில் 100 கோடியை பிடித்து புதிய சாதனை படைக்கும் என கூறப்படுகிறது. இந்த திரைப்படம் காமெடி மற்றும் நல்லதொரு அழுத்தமான மெசேஜை தருவதால் அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது டாக்டர்.

இந்த திரைப்படம் வெளியாகி இதுவரை மூன்று வாரங்கள் ஆகி வசூல் வேட்டை குறையாமல் இருக்கிறது. தமிழைத் தாண்டி USA -விலும் நல்ல வரவேற்ப்பை டாக்டர் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் கேரளாவிலும் தற்பொழுது மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி மக்கள் கூட்டத்தை அழைத்து வந்துள்ளது.

நல்ல வசூலை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் டாக்டர் திரைப்படம் வருகிற தீபாவளியன்று சன் டிவி தொலைக்காட்சியில் மாலை ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகிறது. அடுத்த நாளே நவம்பர் 5 ஆம் தேதி OTT தளத்திலும் டாக்டர் திரைப்படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இரண்டு OTT தளங்களில் வெளியாக இருக்கிறது. நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் என்பது குறிப்பிடதக்கது.  இதனால் படக்குழு செம்ம சந்தோசத்தில் இருக்கிறது. ரசிகர்களும் கொண்டாட ரெடியாக இருகின்றனர்.