100 கோடி வசூலை தாண்டிய சிவகார்த்திகேயனின் “டான்” – உச்சகட்ட சந்தோஷத்தில் படக்குழு.!

don-
don-

நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்துவதால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதன் காரணமாகவே  சிவகார்த்திகேயனை தற்போது அஜித், விஜய்க்கு நிகராக ரசிகர்களும் பார்க்க தொடங்கியுள்ளனர்.

சினிமா உலகில் ரஜினி அஜித் விஜய் போன்ற நடிகர்கள் படங்கள் தான் தொடர்ந்து 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி வருகின்றன அந்த வகையில் சிவகார்த்திகேயனும் டாக்டர் அதனை தொடர்ந்து இப்போது உருவாகியுள்ள டான் திரைப்படமும்  வசூல் வேட்டையை பின்னி பெடல் எடுக்கிறது.

இளம் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் செண்டிமென்ட், காமெடி என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் டான் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இன்றும் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

டான் திரைப்படத்தை பார்க்க நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் அதற்கான வசூலும் தாறுமாறாக ஏறுகிறது. 12 நாள் முடிவில் டான் திரைப்படம் இதுவரை சுமார் 100 கோடிக்கு மேல் ஏறி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது இதனால் டான் படக்குழுவும் செம சந்தோஷத்தில் கொண்டாடி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் கேரியரில் டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து 100 கோடி கிளப்பில் இணைந்த திரைப்படம் டான் இதனால் சிவகார்த்திகேயனும் அளவற்ற மகிழ்ச்சியில் இருப்பதோடு அடுத்த அடுத்த படத்தை ரிலீஸ் செய்து அந்த கொண்ட இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. டாக்டர் திரைப்படத்தையே சொல்லப் போனால் டான் திரைப்படம் வசூலில் ஓவர்டேக் செய்து அசத்தலாம் எனவும் கூறப்படுகிறது.