கடந்த மே 13ஆம் தேதியன்று அட்லி உடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் சிபிசக்கரவர்த்தி உடன் சிவகார்த்திகேயன் முதல் முறையாக கை கொடுத்து நடித்த டான் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி போன்ற முக்கிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள நிலையில் மேலும் பல நடிகர் நடிகைகளும் நடித்து அசத்தியுள்ளனர்.
இப்படம் ஆக்ஷன், சென்டிமென்ட், காதல், கல்லூரி லூட்டி என அனைத்தும் கலந்த கலவையான படமாக அமைந்ததால் இந்த படத்தைக் காண திரையரங்கில் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகின்றன. இதனால் டான் படம் வசூலிலும் ஒவ்வொரு வாரமும் பல கோடிகளை அள்ளி வருகின்றன.
இந்த நிலையில் படம் வெளிவந்து 12 நாள் முடிவில் 100 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது இதனைப் டான் படக்குழு, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் என பலரும் கொண்டாடித் தீர்த்தனர். இந்த நிலையில்தான் படம் இதுவரை 105 கோடி வசூலை பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகியது.
மேலும் வருகின்ற நாட்களிலும் டான் படம் அதிகளவு வசூலைப் பெற்று டாப் நடிகர்களின் படங்களுக்கு நிகராக இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்ற நிலையில் இந்த படம் ஓடிடி தளத்தில் ரிலீசாக போகிறது என தகவல்கள் வெளிவருகின்றன.
அதன்படி டான் படம் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி NetFlix என்ற ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம் இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் ஓடிடி தளத்திலும் டான் படம் செம்ம மாஸ் காட்டும் என எதிர்பார்த்து வருகின்றனர்