12 வது திருமண நாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட கியூட் புகைப்படம்..! ஜோடிகளை வாழ்த்தும் ரசிகர்கள்.

sivakarthikeyan
sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார். இவர் சினிமாவில் கால் தடம் பதித்த நாளில் இருந்து தற்போது வரை இவரது வளர்ச்சியை பார்த்து முன்னணி நடிகர்கள் பலரும் பொறாமைப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி சாதனை படைத்தது. சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிகராக மட்டும் ஜொலிக்காமல் பாடகராகவும், தயாரிப்பாளராகவும் பன்முகம் கொண்டவராக விளங்கி வருகிறார். தற்போது இவர் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக உக்ரேன் நாட்டு நடிகை மரியா, சத்யராஜ் போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இந்த படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து மாவீரன், அயாலன் போன்ற சில படங்களிலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆர்த்தி என்பவர் உடன் திருமணம் ஆகியது. இவர்களது திருமணம் முடிந்து தற்போது 12 வருடங்கள் ஆகின்றன. சிவகார்த்திகேயன் சினிமாவில் எப்படி சிறப்பாக ஜொலிக்கிறாரோ அதேபோல தனது திருமண வாழ்க்கையையும் மிக சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு ஆராதனா என்ற மகளும் குகன் தாஸ் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதியினர் 12ஆவது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன. மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்திக்கு திருமணநாள் வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.