நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தாலும் தனது கடனை அடைக்க முடியாமல் இன்றும் முழி பிதுங்கி வருகிறார். கடனை அடைக்க ஒரே வழி அடுத்தடுத்து இவர் படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றால் மட்டுமே உண்டு என கூறப்படுகிறது. டான் திரைப்படத்தை தொடர்ந்து சிவாகார்த்திகேயன் கையில் மாவீரன், பிரின்ஸ், அயாலன் திரைப்படங்கள் இருக்கின்றன.
தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக ரெடியாக இருக்கிறார் இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பட குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம். ஆனால் சரியான ஒப்புதல் இன்று வரை கொடுக்கவில்லை. படக்குழு சம்பளத்தை அதிகமாக சொன்னால் ஒருவேளை விஜய் சேதுபதி ஒத்துக் கொள்ளலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் கடன்காரர்கள் சிவகார்த்திகேயனிடம் கடனையும் செட்டில் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றனர். சிவகார்த்திகேயன் நண்பர் றது ராஜன் உடன் பல படங்கள் தயாரித்தார் அதில் சுமார் 100 கோடி வரை கடன் ஏற்பட்டது இந்த மொத்த கடனையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டுள்ளார். கடன் பெற்றவர்களிடம் நடந்த பேச்சுவார்த்தையில் தன்னுடைய ஒவ்வொரு படம் ரிலீஸ் அப்போது சுமார் 25 கோடி ரூபாய் வீதம் நான்கு தவணையில் 100 கோடியை திருப்பி தந்து விடுகிறேன் என உறுதி அளித்தார்.
அதன்படி சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படம் வெளியான பொழுது முதல் தகனையாக 25 கோடியை கொடுத்துவிட்டார் ஆனால் அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் பட ரிலீஸ் பொழுது ஏற்கனவே கடன் வாங்கியவர்களிடம் செய்த ஒப்பந்தம் படி அவர் நடந்து கொள்ளவில்லை. இதனால் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்திய கூட்டமைப்பு சிவகார்த்திகேயன் இடம் இந்த வருடத்திற்குள் மீதி 75 கோடியை கொடுத்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் கையில் தற்போது மூன்று படங்கள் கைவசம் இருக்கிறது ஆனால் இந்த வருடத்தில் முட்டி மோதி பார்த்தாலும் இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளிவர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது அப்படி இருக்கையில் எப்படி மொத்த கடனையும் அடைப்பார் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது. நிறைய பட வாய்ப்பு வந்தும் நிம்மதியாக நடிக்க முடியாமல் சிக்கி தவிக்கிறார் சிவகார்த்திகேயன்.