திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பிரபலமடைய முடியும் அந்த வகையில் சின்ன திரையில் தொகுப்பாளராகவும், காமெடியனாகவும் பயணித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் வெள்ளி திரையில் அடியெடுத்து வைத்தார். அதன்பின் சினிமா எப்படி என்பதை நன்கு புரிந்து கொண்டு..
அதற்கு ஏற்றார் போல தன்னை மாற்றி நல்ல கதைகளை தேர்வு செய்து களத்தில் இறங்கி நடிக்க ஆரம்பித்தார் அப்படி இவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறியதால் குறைந்த காத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கெனவே ஒரு இடத்தை பிடித்து வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் தான் பிரின்ஸ்.. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கினார் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் காதல்..
சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகியது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து உக்கரை நாட்டு மாடல் அழகியும், நடிகையுமான மரியா ஹீரோயின்னாக நடித்தார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி கங்கை அமரன், சூரி, ஆனந்தராஜ் என பலரும் நடித்திருந்தனர் படம் கடந்த 21 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் சிறப்பாக இருந்தாலும்,
கலவையான விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ஆறு கோடிக்கு மேல் அள்ளி அந்த நிலையில் இரண்டாவது நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் சுமார் 12 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..