சிவகார்த்திகேயனை சுழன்று சுழன்று அடிக்கும் கர்மா.! கடைசி நேரத்துல இப்படி ஆகிடுச்சே..

ayalaan movie
ayalaan movie

Ayalaan Movie: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் மற்றும் வைபவ் நடித்துள்ள ஆலம்பனா ஆகிய திரைப்படங்கள் நான்கு வாரங்களுக்கு ரிலீசாக தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் அயலான் படம் ஏற்கனவே ரிலீஸ் ஆவதாக கூறப்பட்டது.

ஆனால்  சில பிரச்சனைகளால் ரிலீஸ் தேதி தள்ளி போனது எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கும் ஆப்பு வந்துள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் மற்றும் வைபவ் நடித்துள்ள ஆலம்பனா போன்ற படங்கள் ரிலீஸ் ஆவதற்கு நான்கு வாரங்களுக்கு தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

வாழ்க்கை ஒரு வட்டம் டா.! இங்க ஜெயிக்கிறவன் தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான்.! இந்த வார TRP-யில் மண்ணை கவ்விய ரசிகரக்ளின் ஃபேவர்ட் சீரியல்கள்..

அதாவது இரண்டு படங்களையும் தயாரித்து வரும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தங்களுக்கு தரவேண்டிய 14 புள்ளி 70 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை தரவில்லை என்று கூறி டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் தொடர்ந்து வழக்கு தொடர இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் முதலில் 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வந்தது. அந்த நிறுவனத்திடம் டி.எஸ்.ஆர் நிறுவனத்திடம் இருந்து ரூபாய் 10 கோடி கடனாக பெற்றது அந்த கடனை திருப்பித் தர முடியாத நிலையில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அந்த கடனை ஏற்றுக் கொள்ள பணத்தை தயாரிக்க முன் வந்தது.

எனவே அதன்படி கே.ஜே.ஆர் ஸ்டுடியோ சார்பில் டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ரூபாய் 3 கோடி முதல் தவணை தொகையாக கொடுக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு மீதமுள்ள தொகையை செலுத்தவில்லை என்று டி.எஸ்.ஆர் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

எனவே தங்களுக்கு தரவேண்டிய 14 கோடி 70 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை கொடுக்காமல் கே.ஜே.ஆர் நிறுவனம் படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டது என்றும் நிலுவைத் தொகையை கொடுக்காமல் அயலான், ஆலம்பனா படங்களை வெளியிட அனுமதிக்க கூடாது என்றும் டி.எஸ்.ஆர் நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை ஒரு வட்டம் டா.! இங்க ஜெயிக்கிறவன் தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான்.! இந்த வார TRP-யில் மண்ணை கவ்விய ரசிகரக்ளின் ஃபேவர்ட் சீரியல்கள்..

எனவே இந்த வழக்கை வியாழன் கிழமை விசாரித்த நீதிபதி சரவணன் டி.ஆர்.எஸ் நிறுவனத்தின் பாதத்தில் முகாந்திரம் இருப்பதாக கூறி அயலான் மற்றும் ஆலம்பனா படங்களை நான்கு வாரங்களுக்கு ரிலீஸ் செய்ய தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கில் அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.