நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே இதற்கு முன்பு முகமூடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர்களை தொடர்ந்து காமெடி நடிகர் யோகிபாபு மற்றும் டிக் டாக் பிரபலம் அபர்ணா தாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகிறார்கள். இத்திரைப்படத்தின் முதல் பட்டப்படிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைக்கப்பட்டு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இதில் நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் நடனமாட உள்ள ஒரு பாடலிற்கான காட்சி மற்றும் சண்டைக் காட்சிகள் போன்றவை படமாக படவுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் பொதுவாகவே விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் பாடல்களுக்கு முக்கியத்துவம் தருவதாகவும் அமையும்.
அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தில் அனிருத் இசை அமைத்துள்ளார்.எனவே இத்திரைப்படத்தின் இசை மிகவும் நன்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் முதல் பாடல் ஒன்றை சிவகார்த்திகேயன் தான் எழுதிவுள்ளாராம்.
சிவகார்த்திகேயன் இதற்கு முன்பு சில திரைப்படங்களில் எழுதி இசையமைத்துள்ளார். அதோட நெல்சன் மற்றும் அனிருத் மேக்கிங் வீடியோ ஒன்று உருவாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவல்களை சமீபத்தில் படக்குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள்.