Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் தொடர்ந்து தனது தனித்துவமான நடிப்பினால் சிறப்பான கதை அம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் பழைய பட தலைப்பை காப்பியடித்து இவருடைய நடிப்பில் வெளியான ஐந்து படங்கள் குறித்து பார்க்கலாம். தற்போது சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு அமரன் என தலைப்பு வைத்து இப்படத்தின் அறிமுக வீடியோவை படக் குழு நேற்று வெளியிட்டது. இவ்வாறு பழைய பட தலைப்புகளை சிவகார்த்திகேயனைத் தவிர வேறுயாரும் இந்த அளவிற்கு காப்பி அடித்தது இல்லை என கூறப்படுகிறது.
அமரன்: 1992ஆம் ஆண்டு கே ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக், பானுப்ரியா நடிப்பில் அமரன் என்ற டைட்டிலுடன் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்ற திரைப்படம் தான் அமரன். தற்போது சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக 2024ஆம் ஆண்டில் வெளியாக இருக்கும் தனது படத்திற்கும் அமரன் என பெயர் வைத்துள்ளார்.
60 வயதிலும் ஆசை யாரை விட்டது… இளம் நடிகையை தும்சம் செய்து ஓடவிட்ட நடிகர்..
மாவீரன்: கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் மாவீரன். இதற்கு முன்பு 1986ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அம்பிகா போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்த படத்திற்கும் மாவீரன் என பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஹிந்தியில் வெளியான படத்தினை தமிழில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில் சொல்லும் அளவிற்கு வெற்றினை பெறவில்லை.
வேலைக்காரன்: 2017ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாஸில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான வேலைக்காரன் படம் கமர்சியலாக ரிலீஸ் ஆகி கலவை விமர்சனத்தை பெற்றது. இதே பெயரில் ரஜினிகாந்த், அமலா நடித்த எஸ் பி முத்துராமன் இயக்கத்தின் 1987ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
காக்கி சட்டை: சிவகார்த்திகேயன் ஸ்ரீதிவ்யா இணைந்து நடித்த காக்கி சட்டை படம் 2015ஆம் ஆண்டு ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியானது ஆக்ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் கலக்கியிருந்தார். இதே பெயரில் 1985ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் கமல்ஹாசன், அம்பிகா, மாதவி, சத்யராஜ் நடிப்பில் காக்கிசட்டை படம் வெளியானது.
60 வயதிலும் ஆசை யாரை விட்டது… இளம் நடிகையை தும்சம் செய்து ஓடவிட்ட நடிகர்..
எதிர்நீச்சல்: சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த், நந்திதா ஸ்வேதா நடித்த எதிர்நீச்சல் படம் 2013ஆம் ஆண்டு ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இதே பெயரில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் நாகேஷ் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் 1968ஆம் ஆண்டு வெளியானது. கருப்பு வெள்ளை காலத்தில் வெளியான இப்படத்தில் நாகேஷ் நகைச்சுவை ஹீரோவாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருந்தார்.