டான் பட ட்ரெய்லரால் சிவகார்த்திகேயனை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.! இப்ப இதுதேவையா.?

SIVAKARTHIKEYAN
SIVAKARTHIKEYAN

தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய சில படங்களிலேயே மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிகம் பிடிக்கும் நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் அனைத்திலும் காமெடி மற்றும் நடிப்பு கலந்த திரைப்படமாக அமைவதால் அதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என்ஜாய் செய்து பார்க்கின்றனர்.

அதனால் தற்போது சிவகார்த்திகேயனும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர் திரைப்படம் செம வசூல் செய்து சிவகார்த்திகேயன் கேரியரில் ஒரு சிறந்த படமாக மாறியது. அதனைத் தொடர்ந்து தற்போது டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சிவாங்கி போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து வெளிவந்த இரு பாடல்கள் மக்கள் மத்தியில் செம ட்ரெண்டாகி வைரலாகியது அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்புதான் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியது.

இந்த டிரைலரை வைத்து பார்க்கும்போது சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து வருகிறார். ஒரு காட்சியில் ஆசிரியர்களை டார்சல் செய்வது எப்படி என்ற புத்தகத்தை கையில் வைத்து படிக்கிறார். ஏற்கனவே பள்ளி மாணவர்கள் பலர் ஆசிரியர்களை திட்டுவது போன்ற பல வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகியது.

இதனையடுத்து ஏற்கனவே நம் நாட்டில் மாணவர்கள் இப்படி இருக்கின்ற நிலையில் மக்கள் பலருக்கும் பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இப்படி செய்வது மாணவர்களை தவறான விதத்தில் அழைத்து செல்லும் என நெட்டிசன்கள் பலரும் சிவகார்த்திகேயனை திட்டி வருகின்றனர்.