தமிழ் சினிமாவில் குறுகிய கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அதன் பிறகு மனங்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையை உயர்த்திய திரைப்படம் எதிர்நீச்சல். இந்த படத்திற்கு பிறகுதான் நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையே மாறியது.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடல் வரிகளை எழுதவும், பாடல்களை பாடியும் உள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது. அந்த வகையில் வருத்தப்படாத வாலிபர் என்ற திரைப்படத்தில் தான் ஒரு பாடகராக அறிமுகம் ஆகினார். இதை தொடர்ந்து மான்கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், மாப்பிள்ளை சிங்கம், கனா, லிப்ட், உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிகர், பாடகர், பாடலாசிரியரை தாண்டி இவர் ஒரு தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறார். இப்படி குறுகிய ஆண்டில் சினிமாவில் பல்வேறு பணிகளை செய்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார் இந்த திரைப்படம் தற்போது திரையரங்கிற்கு வெளிவர காத்திருக்கிறது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கவலையிலிருந்து மீண்டு வராத சிவகார்த்திகேயனுக்கு அடிமேல் அடி விழுந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் தற்போது தனது குடும்பத்துடன் ஜாலியாக ரசிகர்களுக்கு பொங்கல் தின வாழ்த்துக்களை கூறி தனது மனைவி, மகன், மகளுடன், எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் 🙏🙏
பொங்கலோ! பொங்கல்!!
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் 😊🙏#HappyPongal #HappySankranti ❤️🤗 pic.twitter.com/H4Pbv6DdOK
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 15, 2023