நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வரும் திரைப்படம் மாவீரன். சாந்தி டாக்கில்ஸ் ப்ரொடக்ஷனில் அருண் விஷ்வா தயாரிப்பில் மடோனா அஷ்வின் இந்த படத்தை இயக்கி வருகிறார். மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக கைகோர்த்து இளம் நடிகை அதிதி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார்.
மற்றும் யோகி பாபு, மிஸ்கின் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது. சோலோவாக சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் வெளியானால் அதிக வசூலை அல்ல வாய்ப்புள்ளது. ஆனால் மாவீரன் படம் ரிலீஸ் ஆகும்..
அதே தேதியில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படமும் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் வெளியாகும் அதே நேரத்தில் சினிமா உலகில் மற்றொரு டாப் நடிகரான கார்த்தியின் ஜப்பான் படம் வெளியானால் மாவீரன் படத்தின் வசூல் குறைய அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இதற்கு முன் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தியின் இரண்டு படங்கள் ஒன்றாக திரையில் மோதின.
அது என்னன்ன என்பதை பார்ப்போம்.. ஆம் சிவகார்த்திகேயனின் ஹீரோ மற்றும் கார்த்தியின் தம்பி போன்ற இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி நேருக்கு நேராக மோதின. இந்த இரு படங்களுமே சுமாரான வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து கடைசியாக சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் போன்ற படங்கள் சென்ற ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. சர்தார் படம் எதிர்பார்த்தபடி அமைந்தது.
ஆனால் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் கதை எதிர்பார்த்த அளவு இல்லாததால் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. அதனால் இந்த மாவீரன் படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. மேலும் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படமும் கார்த்தியின் ஜப்பான் படமும் மோத உள்ளதால் இதில் யார் வெற்றி பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.