சிவகார்த்திகேயன் மிகப்பெரிய ஒரு சூப்பர் ஸ்டாராக வாருவார்.. அன்றே கணித்த பிரபல நடிகர் – வெற்றிமாறன் சொன்ன தகவல்.

vetrimaran
vetrimaran

தமிழ் சினிமா உலகில் சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன் இவர் தனுசுடன் கைகோர்த்து பணியாற்றிய திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான். ஆனால் இப்பொழுது  சூரி, விஜய் சேதுபதி வைத்து விடுதலை என்னும் படத்தை எடுத்து வருகிறார்.  இப்படி இருக்கின்ற நிலையில் வெற்றிமாறன் தனுஷின் திருச்சிற்றம்பலம்.

ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷின் நட்பு குறித்தும் மற்றும் நடிகர்கள் குறித்தும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது. காதல் கொண்டேன் அந்த டைம்ல தான் தனுஷை மீட் பண்ணினேன் அவரை அப்பொழுது வந்து அவர் ரெண்டு படம் பண்ணிட்டாரு.. திருடா திருடி வந்து மிகப்பெரிய ஹிட்டாகி ஒரு ஸ்டாராக வந்து அது ஒரு கனாக்காலம் படத்துக்கு வந்தாரு.. தன்னைத் தானே அவரே செதுக்கி கொண்டு தான் இருந்தார்.

இப்போ தமிழ்ல இருந்து ஹிந்தில நடிச்சு அவங்க சக்சஸ்ஃபுல் ஹீரோவாக அங்கிருந்து ஹாலிவுட் போய் நடிச்சிருக்காரு இன்னும் பெரிய பெரிய விஷயங்கள் நடக்கிறதுக்கான கதவுகள் அனைத்தும் திறந்து விட்டன.. இன்னும் நிறைய வரும்னு நினைக்கிறேன் நான் ஒரு அசிஸ்டன்ட் டைரக்டராக இருக்கும்பொழுது கொஞ்சம் முரட்டுத்தனமாக அவர்கிட்ட நடந்துக்கிட்டேன். அவரு விட்டுவிடுவாரு ஒண்ணுமே ரியாக்ட் பண்ணல..

அடுத்த ஆறு மாசம் கழிச்சு அவருக்கு என் மேல இருக்கிற நம்பிக்கையை பாருங்க தனுஷ் என்கிட்ட ஒரு கதை இருக்கு நான் உங்ககிட்ட சொல்றேன் நார்மலா மத்தவங்க இருந்தா போன தடவை நம்மகிட்ட அவ்வளவு ரூடா இருந்தவனுக்கிட்ட நம்ப கதை கேட்கணுமா என சொல்லுவாங்க ஆனா தனுஷ் அப்படி இல்ல சார் வாங்க சார் நான் கேட்கிறேன் அன்னைக்கு நைட்டு கேட்கிறாரு கதையை கேட்ட உடனேயே அவர் சொன்னாரு சார் நான் நார்மலா அண்ணன் கிட்ட கேட்டு தான் சார் முடிவு எடுப்பேன் இந்த கதை அவரிடம் கேட்காமல் எனக்கு ஓகே சொல்லணும்னு தோணுது சார் என்று சொன்னாரு..

sivakarthikeyan
sivakarthikeyan

அன்னையில் இருந்து நாலு வருஷம் கழிச்சி நாங்க படம் பண்ணினோம் தனுசுக்கு முன்கூட்டியே ஒருவருது திறமையை கணிக்க கூடிய ஆற்றல் உண்டு அப்படித்தான் அனிருத் ஒன்பதாவது படிக்கும்போதே அவரது தாளம் போடுவதை பார்த்து இவன் மிகப்பெரிய ஒரு மியூசிக் டைரக்டரா வருவார் என்று சொன்னாரு அது அப்படியே நடந்துச்சு அப்புறம் ஒரு தடவை சிவகார்த்திகேயனை பார்த்து  பயங்கரமான டேலண்ட் உள்ள ஒரு ஆளு சார் ஒரு சூப்பர் ஸ்டார் ஆகுவதற்கான அத்தனை தகுதிகளும் அவர்கிட்ட இருக்குன்னு சொன்னாரு..