ஹீரோயின்களை வளர்த்து விட ஆசைப்படும் சிவகார்த்திகேயன் – இயக்குனர்களுக்கு போடும் புதிய கண்டிஷன்.!

sivakarthikeyan
sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய சில வருடங்களிலேயே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்து தவிர்க்க முடியாத ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார். அந்த வகையில் அண்மைக்காலமாக இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் ஒவ்வொன்றும் டாப் நடிகர் ஆன அஜித் விஜய் சூர்யா போன்றவர்களின் படங்களுக்கு நிகராக அமைகின்றன.

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படம் நல்ல வசூல் வேட்டையை நடத்தியது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில் படத்தை வருகின்ற தீபாவளிக்கு வெளியிட படகுழு தயாராக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த ஒரு சில படங்களில் கமிட் ஆகிய சிவகார்த்திகேயன் மண்டேலா என்ற படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் இந்த படத்தின் கதையை ஒரு வரி மட்டுமே கேட்டுவிட்டு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஓகே சொல்லி கால் சீட் கொடுத்து விட்டாராம்.

பின்பு படத்திற்கான முழு கதையையும் எழுதி இயக்குனர் அஸ்வின் சிவகார்த்திகேயனிடம் கொடுத்துள்ளார் அதை படித்துவிட்டு அவர் மிகவும் ஷாக் ஆகி உள்ளாராம் ஏனென்றால் இந்த படத்தில் ஹீரோயின் காட்சிகள் மிகவும் குறைவாக இருக்கிறதாம். இதனால் படத்தின் கதையை மாற்ற சொல்லி ஹீரோயின் காட்சிகளை அதிகப்படுத்தி எழுதிக் கொண்டு வருமாறு அஸ்வின்னிடம் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும் கொடுத்த கால் சீட்டை இரண்டு மாதங்களுக்கு தள்ளி போட்டு விட்டதாக கூறப்படுகின்றன. நல்லவேளை சிவகார்த்திகேயன் கதை பிடிக்கவில்லை என ரொம்ப நாள்  இழுத்து போடாமல் இரண்டு மாதங்கள் மட்டுமே தள்ளி வைத்தது நல்லது எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகின்றன.