தனது திறமையை சோதித்துப் பார்த்த சிவகார்த்திகேயன் – கடைசியாக கிடைத்த தெளிவு.! தொடர் வெற்றி இதுதான் காரணம்.

sivakarthikeyan
sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் காமெடியனாகவும் பயணித்தார் ஒரு கட்டத்தில் இவருக்கு வெள்ளி திரை வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்திக் கொண்டு ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின்பு மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். அதற்கு முக்கிய காரணம் இவரது காமெடி சென்ஸ் தான் ஏனென்றால் இவரது படங்கள் முழுவதும் காமெடியாக இருப்பதால் அதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்த்தனர். அந்த படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கவே சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தார் சிவகார்த்திகேயன்.

இப்படி காமெடி படங்களை கொடுத்து ஓடிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் தனது ரூட்டை மாற்றி நடித்துப் பார்க்கலாம் என வேலைக்காரன் திரைப்படத்தில் கொஞ்சம் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதை உணர்ந்து கொண்ட சிவகார்த்திகேயன் பின்பு அடுத்தடுத்து காமெடி மற்றும் ஆக்சன் போன்ற அனைத்தும் கலந்த மாதிரி படங்களை கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்தபோது பேசிய சிவகார்த்திகேயன் முந்தைய கால கட்டத்தில் பாதை மாறி போய்விட்டதாகவும் தற்பொழுது தெளிவாக உள்ளேன் எனக் கூறியுள்ளார். முன்பெல்லாம் சில நடிகர்களை தான் டாப் ஹீரோ என்று கூறுவார்கள் ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் கண்டிப்பாக அவர்களும் டாப் ஹீரோவாகலாம்.

ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு காமெடி திரைப்படங்கள் தான் சைட்டானது.  ஒருகட்டத்தில் அதிலிருந்து கொஞ்சம் மாறுவதற்காக சீரியஸான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தேன் அங்க தான் கொஞ்சம் பாதை மாறி போய்விட்டேன். பிறகு மீண்டும் தற்போது மக்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதற்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.