சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பல பிரபலங்கள் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டனர் ஆனால் சிவகார்த்திகேயன் அப்படி கிடையாது சின்னதுறையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து தனக்கென ஒரு முழு அங்கீகாரத்தை பிடித்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அனு திப் இயக்கத்தில் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதே தினத்தில் வெளியான கார்த்தியின் சர்தார் திரைப்படம் விமர்சன ரீதியாக வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் நடிகர்கள் சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தின் பிறகு இவர் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது இந்த நிலையில் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகிய சில மணி நேரத்தில் திருடப்பட்டு உள்ளது அதாவது இந்தப் படத்தை தற்போது படம் வெளியான உடனே இணையத்தில் வெளியிட்டுள்ளனர் இதனால் பிரின்ஸ் பட குழு அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
பிரண்ட்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு வருகிறார் அப்போது ஆங்கில ஆசிரியராக பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஒரு பெண் இந்த ஆசிரியர் பணியில் வேலை செய்ய வருகிறார் அப்போது அந்தப் பெண் மீது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு காதல் ஏற்படுகிறது.
அதன் பின்னர் இருவரும் காதலித்து வருகிறார்கள் ஆனால் இவர்களுடைய காதல் அந்த ஊர் மக்களுக்கு பிடிக்கவில்லை அது மட்டுமல்லாமல் தமிழர்கள் பிரிட்டிஷ்காரர்கள் இடம்தான் அடிமையாக இருந்தார்கள் அதனால் இவர்கள் இருவரும் காதலிப்பது அந்த ஊர் மக்களுக்கு பிடிக்க வில்லை இதனால் சிவகார்த்திகேயனை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார்கள். அதன் பிறகு இவர்கள் இருவரும் எப்படி ஒன்று செல்கிறார்கள் என்பதே மீதமுள்ள கதை.