விஜய் நடித்து வரும் “பீஸ்ட்” படம் : இந்த பொருளை மையமாக வைத்து தான் எடுத்து உள்ளனராம் – பேட்டியில் நாசுக்க சொன்ன சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan-and-vijay
sivakarthikeyan-and-vijay-444

சினிமா உலகைப் பொருத்தவரை ஒரு புதிய படம் வெளிவந்தால் அந்தப் படத்தை ரசிகர்கள் முதலில் எதிர்பார்ப்பது பின் ரசித்து பார்ப்பது பிடிக்கும் பழைய படங்களின் சாயல் இல்லாமல் புதுவிதமாக இருந்தாலே அந்த படத்தை வேற லெவல் கொண்டாடுவார்கள் அந்த வகையில் நெல்சன் திலிப்குமார் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தை வெறும் நயன்தாராவை வைத்து சூப்பராக எடுத்து வெற்றி கண்டார்.

அதை தொடர்ந்த பிறகு பல நடிகர்களுக்கு கதை சொன்னார் முதலில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதையை சொல்ல அந்த படம் டாக்டர் என்ற பெயரில் எடுக்கப்பட்டது இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 9ம் தேதி வெளியாக இருக்கிறது. இதை அடுத்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் விஜயுடன் இணைந்து பீஸ்ட் என்ற பெயரில் ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது வெளிநாடு மற்றும் இந்தியாவைச் சுற்றி படப்பிடிப்புகள் எடுத்து வந்த நிலையில் அடுத்த கட்டமாக படக்குழு ரஷ்யா செல்ல இருக்கிறது. விஜயின் பீஸ்ட் திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அந்த படத்திற்கு முன்பாக நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள திரைப்படம் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக டாக்டர் படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது அப்பொழுது சிவகார்த்திகேயனிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது.  அதில் ஒன்று டாக்டர் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படம் எப்படிப்பட்ட ஒரு படமாக இருக்கும் என கேட்டார்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் நெல்சன் இதுவரை போதைப்பொருள், human traffic, organic traffic ஆகியவற்றை வைத்து திரைப்படங்களை இயக்கியுள்ளார் எனவே அவர் விஜய்யை வைத்து எடுக்கும் படம் ஒரு gold traffic திரைப் படமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார் இச்செய்தி தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.