தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் படங்களில் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் படங்களை தயாரிப்பது மற்றும் பாடுவது என பன்முகத்தன்மை கொண்டவராக சினிமா உலகில் இருக்கிறார். இதனால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
டாக்டர், டான் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அயாலன், பிரின்ஸ் ஆகிய படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார் இந்த படங்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து வெளிவர ரெடியாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கி உள்ளார்.
மாவீரன் திரைப்படத்தை மண்டேலா அஸ்வின் இயக்குகிறார். அருண் விஷ்வா இந்த படத்தை தயாரிக்கிறார் இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் இவர் அண்மையில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் படத்தில் நடித்து அறிமுகமானவர்.
மாவீரன் திரைப்படம் இரண்டாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்திற்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சம்பளமாக 25 லட்சம் கொடுக்கப்பட இருக்கிறதாம். அதிதி சங்கரரை பட குழு தட்டி தூக்க முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் என சொல்லப்படுகிறது காரணம் ஷங்கரும் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தவர் தற்பொழுது அதிதி சங்கரை நடிக்க வைத்தால் படத்தின் பிரமோஷனுக்கும் வருவார்.
அதேசமயம் அதிதி ஷங்கருக்கு குறைந்த சம்பளத்தை கொடுத்து நடிக்க வைக்கலாம் அவர் இந்த படத்தை தவிர வேறு எங்கேயும் ஓட மாட்டார் கூப்பிட்ட நேரத்திற்கு வருவார் என திட்டமிட்டு தான். இதனால் சிவகார்த்திகேயனுக்கு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்தது போல அமைந்து விட்டதாம் செம பிளான் என ரசிகர்களும் கூறி அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.