தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் யாருக்கும் தெரியாமல் பல குடும்பங்களுக்கு உதவி செய்திருக்கும் நிலையில் அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. நேற்று சிவகார்த்திகேயன் பிறந்த நாளை ஒட்டி பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறியிருந்தனர்.
அந்த வகையில் சிவகார்த்திகேயனை பற்றி ஏராளமான சுவாரசியமான தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில், உடன் பிறப்பே பட இயக்குனர் இரா சரவணன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது சினிமா சம்பந்தப்பட்ட ஒரு ஆளுமைக்கு திடீர் நெஞ்சு வலி அப்பல்லோவில், அட்மிட் அறுவை சிகிச்சைக்கு பணம் தேவை, அவர் பணியாற்றம் நிறுவனத்தினர் ஒருவர் போராட நண்பர்கள் நாங்களும் திண்டாடினோம், ஒரு லட்சம் கொடுத்தார்.
மற்றவர்களும் கொடுத்தார்கள் ஆனாலும் திரட்டிய தொகை போதவில்லை சார் நடிகர் சிவகார்த்திகேயனிடம் கேட்டு பார்க்கிறீர்களா? என என்னிடம் ஒருவர் சொல்ல நான் சட்டென்று மறுத்து விட்டேன். காரணம் நான் சிவாவிடம் நிறைய கேட்டு விட்டேன் அவரும் மறுக்காமல் செய்து கொண்டே இருக்கிறார் முடியாது என அவர் சொன்னதே இல்லை அதற்காக எல்லாவற்றிற்கும் அவரிடம் போய் நிற்பது எனக்கு நியாயமாக படவில்லை.
இரண்டு நாட்கள் கழித்தும் போதிய தொகை திரட்ட முடியாத நிலையில் வேறு வழியே இல்லை விஷயத்தை தம்பி சிவகார்த்திகேயனிடம் மொத்தமாக கொட்டி தீர்த்தபோது, நான் பார்த்துக்கிறேன் தொகை முழுவதையும் நான் கட்டுகிறேன் என் பங்களிப்பை அவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எல்லாரும் சேர்ந்து அவருக்காக நிற்பதாகவே இருக்கட்டும்.. என்றார் சிவா.
சட்டென ஒரே ஒரு ஃபோனில் மொத்த பாரத்தையும் கைமாற்றிக் கொண்ட தம்பி சிவாவின் அன்பு கோடி பெறும்.. திரட்டிய தொகை கையில் இருக்கிறது தேவைப்படும் தொகையை மட்டும் மருத்துவமனைக்கு கொடுத்தால் போதும் தம்பி என வற்புறுத்திச் சொன்னேன் அவர் ரொம்ப முக்கியமான ஆள் பேசுறப்ப அவ்வளவு எனர்ஜி கொடுக்கிற மனிதர்.. ஹாஸ்பிட்டலில் பேசி அவருக்கு தேவையான எல்லாவற்றையும் செஞ்சு கொடுங்க என தம்பி நவநீதனை பணித்து, சிவா காட்டி அக்கறை அந்த உதவியை விட மேலானது.
சிகிச்சையில் இருக்கும் அந்த ஆளுமையிடம் சிவாவின் வார்த்தைகளை அப்படியே சொன்னேன் குலுங்கி ஆள தொடங்கி விட்டார் என்னை இந்த அளவுக்கு நினைவு வச்சிருக்காரே.. என நெகிழ்ந்து போனார். சிவகார்த்திகேயன் போன்றவர்கள் உற்ற துணையாக நிற்பது தான் அனைவருக்கும் பெரிய ஆறுதல் இவ்வாறு தொடர்ந்து பல ஏராளமானவர்களுக்கு சிவகார்த்திகேயன் உதவி செய்து வருகிறார் எனவே ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.