சினிமா உலகில் என்னதான் நடிகர்கள் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தாலும் ஒரு சில தோல்வி படங்கள் அவருக்கு மரண அடி விழும் அந்த வகையில் தொடர்ந்து 100 கோடி வசூல் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த பிரின்ஸ் திரைப்படம் மோசமான படமாக அமைந்தது இதனால் அவர் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டார்.
இதற்கு படங்களின் மூலமே பதிலடி கொடுக்க நடிகர் சிவகார்த்திகேயன் மடோனாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் படபிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அண்மையில் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
படம் வருகின்ற 14ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர், மிஷ்கின், கவுண்டமணி, சரிதா மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ட்ரைலர் சிறப்பாக இருந்ததால் நிச்சயம் படம் வெற்றி பெறும் என பலரும் தனது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அண்மையில் கூட இயக்குனர் மடோன் அஸ்வின் மாவீரன் படம் குறித்து ஒரு சின்ன தகவலையும் பகிர்ந்தார். அதாவது லோகேஷ் கனகராஜ் இடம் மாவீரன் படத்திலிருந்து ஒரு சின்ன காட்சியை போட்டு காண்பித்தேன் அதை பார்த்துவிட்டு லோகேஷ் பிரமித்து போனார் என கூறினார். இப்படி செம்ம மாஸாக மாவீரன் திரைப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாவீரன் படத்தில் நடித்ததற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மாவீரன் படத்தில் நடிக்க 25 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த பிரின்ஸ் படத்திற்காக 30 கோடி வாங்கினார் ஆனால் அந்த படம் சுமாரான படமாக மாறியதால் தற்பொழுது 5 கோடி சம்பளத்தை குறைத்து நடித்துள்ளார் என கூறப்படுகிறது.