சீனியர் நடிகரை மதிக்காமல் புகழ் போதையில் தலை கால் புரியாமல் ஆடும் சிவகார்த்திகேயன்.! நடிகர் கேட்ட நச் கேள்வி

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல் படங்களை தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் அவர் தயாரித்த திரைப்படங்கள் சில வெற்றி பெற்றாலும் பல படங்கள் தோல்வியை சந்தித்தது அதனால் நடிகர் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார்.

பண நெருக்கடியில் சிக்கித் தவித்த சிவகார்த்திகேயன் அவர்களுக்கு மிகப் பெரிய பலமாக இருந்தது டாக்டர் திரைப்படம். டாக்டர் திரைப்படத்தின் வெற்றியின் மூலம் தனக்கு இருந்த பண நெருக்கடியை சமாளித்தார். டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் அந்த திரைப்படத்தின் லாபத்தின் மூலம் தனக்கு இருந்த கடன்களை சிலவற்றை குறைத்தார்.

இந்த நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் அவர்கள் டான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவன் போல் நடித்துள்ளார். அதனால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது படக்குழு புரமோஷன் வேலைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

மேலும் டான் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் புரமோஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் பிரபல திரையரங்கின் முன் டான் திரைப்படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது அதில் எஸ் ஜே சூர்யாவின் புகைப்படம் மிகவும் பெரியதாகவும் அவருக்குப்பின் சிவகார்த்திகேயன் மற்ற நடிகர்களின் புகைப்படமும் இடம் பெற்று இருந்தது இதை பார்த்த சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகன் நான் என்னை பெரிதாக போடாமல் எஸ் ஜே சூர்யா புகைப்படத்தை மட்டும் எப்படி நீங்கள் பெரிதாக போடலாம் என கேட்டுள்ளார்.

முதலில் அந்த புகைப்படத்தை மாற்றுங்கள் இல்லையென்றால் நடப்பதே வேறு என கட்டளையிட்டார் இதனை அறிந்த பல சினிமா பிரபலங்கள் வளர்வதற்கு முன்பு இருந்த பணிவு சிவகார்த்திகேயனிடம் வளர்ந்த பிறகு இல்லை என பலரும் கூறி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் புகழ் அதிகரிக்க அதிகரிக்க தலைகால் புரியாமல் ஆடுகிறார் எனவும் வசைபாடி வருகிறார்கள்.

இந்த நிலைகள் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகளுக்கு நன்றி கூறும் விதமாக தன்னுடைய சமூக வலைதளமான டுவிட்டரில் டான் படத்தில் நடித்த பிரபலங்களின் பெயர்களை பதிவிட்டு நன்றி கூறியுள்ளார். இதில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் வந்த சிவாங்கி உட்பட பல பிரபலங்களையும் அவர்களின் பெயர்களை பதிவிட்டு நன்றி கூறினார்  சிவகார்த்திகேயன் ஆனால் ஒருவரை மட்டும் விட்டு விட்டார்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடத்திலும் காமெடி நடிகனாக வலம் வருபவர் மனோபாலா இவர் பெயரை மட்டும் விட்டுவிட்டு சிவகார்த்திகேயன் நன்றி கூறியுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது இதை பார்த்த ரசிகர்களும் நடிகர் மனோபாலாவும் எங்கே என்னுடைய பெயர் என கேட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயன் புகழின் உச்சத்தில் தலைகால் புரியாமல் ஆடுகிறார் சீனியர் நடிகர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கவேண்டும் என்பதே அவருக்குத் தெரியவில்லை என விமர்சனம் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

அதுமட்டுமில்லாமல் இப்படியே போனால் சிவகார்த்திகேயன் பழைய நிலைமைக்கு வந்து விடுவார் இவரின் படங்கள் பெரும் நஷ்டத்தையும் சந்திக்க நேரிடும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.