11 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் சிவகார்த்திகேயன்.. மாவீரன் படத்திலிருந்து வெளிவந்த ஸ்பெஷல் போஸ்டர்

maveeran
maveeran

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் காமெடி படங்களில் நடித்து வந்த இவர் போகப்போக  நடிகர்  ஆக்சன், காமெடி என அனைத்தும் கலந்த படங்களில் நடித்து வெற்றி கண்டு வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான், பிரின்ஸ் போன்ற திரைப்படங்கள் அனைத்தும் அப்படித்தான் இருந்தன.

அந்த படங்கள் வெற்றி பெற்றன அதனைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அந்த மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படம் போல இருக்குமென தெரிய வருகிறது. மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் லுக் வேற மாதிரி இருக்கிறது.

அவருடன் இணைந்து யோகி பாபு, அதிதி ஷங்கர், சரிதா, மிஸ்கின் போன்ற பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் படத்தை தயாரித்து வருகிறது.

படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஒரு விசேஷ நாளில் மாவீரன் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளதாம் இந்த நிலையில் திரையு உலகிற்கு வந்து சிவகார்த்திகேயன் 11 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு மாவீரன் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக் கூறி இருக்கிறது புகைப்படத்தை..

பார்த்த ரசிகர்கள் மாவீரன் திரைப்படம் மிகப்பெரிய ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் எனவும்,  இதுவரை பார்திடாத சிவகார்த்திகேயனை இந்த படத்தில் பார்க்க முடியும் எனவும் கூறி கமெண்ட் அடித்து வாழ்த்தி வருகின்றனர். இதோ மாவீரன் படத்திலிருந்து வெளிவந்த அந்த புதிய போஸ்டரை நீங்களே பாருங்கள்.