தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஓடி கொண்டு இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் அண்மை காலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள் தான் அதிலும் கடைசியாக இவர் நடித்த படங்கள் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்து செய்திருந்தன.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் ஆகிய படங்கள் 100 கோடி வசூல் செய்தன. இதனால் சிவகார்த்திகேயன் செம சந்தோஷத்தில் இருக்கிறார் இப்பொழுது கூட இவர் பிரின்ஸ், அயாலன், மாவீரன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் இந்த ஒவ்வொரு திரைப்படமும் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கின்றன.
குறிப்பாக ரசிகர்கள் மாவீரன் படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர் காரணம் மாவீரன் திரைப்படத்தை மண்டேலா அஸ்வின் இயக்குகிறார் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் கெட்டப் வித்தியாசமாக இருக்கிறது அதேசமயம் அறிமுக நடிகை அதிதி சங்கர் இந்த படத்தில் இணைந்துள்ளது மிகப்பெரிய ஒரு பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த படங்கள் மிகப்பெரிய ஒரு வெற்றியை ருசிக்கும் பட்சத்தில் அஜித் விஜய் ஆகியோர்களுக்கு அடுத்தபடியாக நடிகர் சிவகார்த்திகேயன் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்பொழுது சிவகார்த்திகேயன் மார்க்கெட் அதிகரித்துள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவையும் தாண்டி பலவற்றில் பயணித்துள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். அந்த வகையில் ஒரு சோப்பு விளம்பரத்தில் கூட நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் அதுவும் முன்னணி நடிகையான திரிஷாவுடன் இவர் கைகோர்த்து அந்த சோப்பு விளம்பரத்தில் நடித்து அசைத்தி உள்ளார் அதன் வீடியோ தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த வீடியோவை..
Unnoticed @Siva_Kartikeyan advertisement with @trishtrashers 😲@Troll_Cinema pic.twitter.com/CkN62pNqXw
— TC (@TrollCinemaOff) March 14, 2022