ரெஸ்ட் எடுக்க.. சொந்த ஊர் பக்கம் சென்ற சிவகார்த்திகேயன்.? விடாமல் துரத்தும் பொதுமக்கள் – இணையதளத்தில் வேகம் எடுக்கும் புகைப்படம்.

sivakarthikeyan-

சினிமாவுலகில் கடினமாக உழைத்து போராடியவர்கள் அனைவருமே தற்பொழுது உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். அந்த வகையில் அஜித், விஜய், ரஜினி போன்றவர்களை தொடர்ந்து அந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளவர் தான் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் கடினமாக உழைத்து ஒருகட்டத்தில் வெள்ளித்திரை பக்கம் அடியெடுத்து வைத்தார்.

சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு உணர்ந்து கொண்டு அதற்கேற்றவாறு தனது உடம்பையும் திறமையையும் மாற்றி அமைத்துக் கொண்டு சினிமா உலகில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே காமெடி கலந்த திரைப்படங்களாக இருப்பதால் குடும்பங்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது மேலும் இவரது படங்கள் நல்ல வசூலும் ஈட்டின.

அண்மையில் கூட சிவகார்த்தியன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து இப்பொழுது பல்வேறு சிறந்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் முதலாவதாக டான் திரைப்படம் வெகுவிரைவிலேயே வெளிவர ரெடியாக இருக்கிறது.

அதனை தொடர்ந்து சிங்க பாதை, அயாலன் மற்றும் தெலுங்கில் அனுதீப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படியே ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கு ஏற்றவாறு தனது சம்பளத்தையும் அதிகமாக வாங்கி வருகிறார். வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் அவ்வபோது ரசிகர்களை சந்திப்பது மற்றும் சொந்த ஊருக்கு போய் வருவதும் அவரது ஸ்டைல்.

அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகர் சிவகார்த்திகேயன். அவரது சொந்த ஊருக்கு சென்று அங்கு மக்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் கோயிலுக்கும் சென்று வந்தார் அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

sivakarthikeyan-
sivakarthikeyan-
sivakarthikeyan-