டாக்டர், டான் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் என்னை வற்புறுத்தினார்.! அவருடைய வீக்னஸ் பாயிண்ட்.. உண்மையை உடைத்த பிரியங்கா..

sivakarthikeyan priyanka arul mohan
sivakarthikeyan priyanka arul mohan

sivakarthikeyan weakness priyanka arul mohan open talk : குழந்தைகளை அதிகமாக கவர்ந்த ஹீரோக்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர் இவர் திரைப்படத்திற்கு குழந்தை ரசிகர்கள் அதிகம் சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் உரு மாறியுள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயனின் டான் மற்றும் டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலை கடந்தது இதன் மூலம் 100 கோடி கிளப்பில் இணைந்து விட்டார்.

கடைசியாக நடித்த மாவீரன் திரைப்படமும் சிவகார்த்திகேயனுக்கு ஓரளவு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய டான் மற்றும் டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் தான் பிரியங்கா அருள் மோகன். இவர் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் பிரியங்கா அருள் மோகன் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த பேட்டியில் சிவகார்த்திகேயன் குறித்தும் பேசியுள்ளார். அது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயனின் வீக்னஸ் இதுதான் என பிரியங்கா கூறியுள்ளது ரசிகர்களிடையே சிரிப்பை வரவழைத்துள்ளது ஏனென்றால் சிவகார்த்திகேயனுக்கு இணைப்பு என்றால் மிகவும் பிடிக்கும் அவர் இனிப்புக்காக அடிமையாகி விட்டதாகவும் கூறியுள்ளார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன் அடிக்கடி இனிப்புகள் சாப்பிட்டுக் கொண்டே இருப்பாராம் அந்த அளவு அவருக்கு பிடிக்குமாம் அவர் சாப்பிடுவது மட்டுமல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அனைவரையும் சாப்பிட சொல்லி வற்புறுத்துவாராம் அப்படிதான் பிரியங்கா அருள்மோகனையும் பலமுறை ஸ்வீட் சாப்பிட சொல்லி வற்புறுத்தி உள்ளார்.

ஆனால் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள இனிப்புகளை தான் தவிர்ந்து விடுவேன் ஆனால் அது குறித்து சிவகார்த்திகேயன் எந்த ஒரு கவலையும் படாமல் அதிகமாக இனிப்புகளை எடுத்துக் கொள்வார். சிவகார்த்திகேயனே ஒரு பேட்டியில் இனிப்பு எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்துவரும் எஸ் கே 21 வது திரைப்படம் சூட்டிங் தொடர்ந்து மூன்று மாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது மீதமுள்ள காட்சிகள் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார் படத்தை கமலஹாசன் தயாரித்து வருகிறார்.