தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் அந்த வகையில் தற்போது 5 திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார். இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் இறுதியாக இவர் நடிப்பில் டான் திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதன் காரணமாக தொடர்ந்து ஏராளமான தயாரிப்பு நிறுவனங்கள் சிவகார்த்திகேயனை தங்களது திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்காக போட்டு போட்டுக் கொள்கிறார்கள். இந்நிலையில் தற்பொழுது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக கமிட்டாகியுள்ளார்.
மேலும் இவர் நடிக்க உள்ள இத்திரைப்படத்தில் டூரிஸ்ட் கைடு என்ற கதாபாத்திரத்தில் பிரின்ஸ் என்ற பெயரில் நடிக்க வைத்திருக்கிறார். மேலும் இத்திரைப்படம் தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியிருக்கிறது.
இத்திரைப்படத்திற்கு இப்படி ஒரு பெயர் வைத்ததற்கு பின் பல காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது அதாவது சிவகார்த்திகேயனுடன் ஆர்டி ராஜா நட்பாக இருக்கும் பொழுது அவருக்கு பிரின்ஸ் என்ற அடைமொழி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு டுவிட்டர் பக்கத்தில் உள்ள எல்லாம் அவருடைய மெசேஜில் பிரின்ஸ் என்ற பெயர் தான் வருமாம்.
மேலும் இந்த பிரின்ஸ் என்ற அடைமொழி பெயரினால் பிரபலமடைய வேண்டும் என விரும்பினார்கலாம் ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சில மன கசப்பின் காரணமாக இருவரும் பிரிந்து அந்த அடைமொழி பெயரும் அப்படியே மறைந்து விட்டது. இதன் காரணமாகத் தான் மீண்டும் அதனை அடை மொழியாக வைக்க வேண்டும் என்ற முயற்சியில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் டான் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் ஒன்றில் கூட பிரின்ஸ் சென்ற வரி இடம்பெற்றிருந்த தாம். மேலும் தற்போது அவர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் அதே பெயரை டைட்டிலாக வைத்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு போட்டியாகவும் சிவகார்த்திகேயன் இந்த பெயரை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிற்கு பிரின்ஸ் என்ற அடைமொழி தான் கொடுத்து வருகிறது. இவ்வாறு தெலுங்கில் மகேஷ்பாபு போல் தமிழில் சிவகார்த்திகேயனாக வேண்டும் என ஆசைப்படுகிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.