ரஜினி போல் மாற ஆசைப்படும் சிவகார்த்திகேயன்.? தலைவருக்கு எப்படி எல்லாம் ஐஸ் வைக்கிறாரு பாருங்கள்.

rajini
rajini

தொடர் வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். டான் திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படமான பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது அதனைத் தொடர்ந்து மாவீரன் திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்தை மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் இந்த படத்தின் டைட்டில் வீடியோ வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதில் சிவகார்த்திகேயன் ஒரு புதிய கெட்டப்பில் நடிக்கிறார். ரஜினி நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த மாவீரன் படத்தின் டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கூட ரஜினியின் வேலைக்காரன் படத்தின் டைட்டில் சிவகார்த்திகேயன் பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடித்த படங்களின் பெயர்கள் மீண்டும் வைக்கப்பட்டு நடிகர்கள் நடித்து வருகின்றனர் அந்த வகையில் சிவகார்த்திகேயன் இரண்டாவது முறையாக ரஜினி பட டைட்டிலை வைத்துள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் சூப்பர் சாராக மாற வேண்டும் என்ற ஆசை சிவகார்த்திகேயனுக்கு வந்துவிட்டதாக கூறி கமெண்ட்களை அடித்து வருகின்றனர்.  அதற்கு ஏற்றார் போல சிவகார்த்திகேயனும் தன்னுடைய படங்களில் ரஜினி சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு ரெஃபரென்ஸை வைத்து விடுகிறார் இதனால் அவர் ரஜினிக்கு நன்றாக ஐஸ் வைப்பதாக ஒரு பக்கமும் பேசப்பட்டு வருகிறது.

மேலும் சிவகார்த்தியன் அண்மைகால படங்கள் தொடர்ந்து வசூல் பெற்று வருவதால் வசூல் மன்னன் லிஸ்டில் இவரும் இணைந்துள்ளதார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது ரஜினியின் இடத்தை பிடிக்க நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் ஆசை வந்துவிட்டது. அதற்கான வேலைகளை தான் பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது.