அதிகாலையிலேயே ஓட்டு போட சென்ற சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இதொ.!

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயனும் அதிகாலையிலேயே தனது வாக்கை செலுத்திவிட்டு ரசிகர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துகொண்டது  இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

sivakarthikeyan
sivakarthikeyan

தமிழகத்தில் சட்டமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா தோற்று அதிகரித்து வருவதால் அனைவரும் வாக்குச்சாவடியில் மாஸ்க் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது அதுமட்டுமில்லாமல் பலத்த பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாக்கு பரபரப்பாக நடைபெற்று சேகரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் வாக்காளர்களுக்கு சனிடைசர், முகக்கவசம், கையுறை, வெப்ப பரிசோதனை என அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் திரைப் பிரபலங்கள் அரசியல்வாதிகள் என அனைவரும் தங்களது வாக்கை செலுத்தி வந்தார்கள்.

sivakarthikeyan

அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அதிகாலையிலேயே தனது வாக்கை செலுத்தினார் மேலும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் மட்டுமல்லாமல் விஜய் சைக்கிளில் வந்து தனது வாக்கை பதித்தார் அதுமட்டுமில்லாமல் அஜித் தனது மனைவியுடன் தனது வாக்கை செலுத்தியுள்ளார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, கார்த்திக் என பலரும் தங்களுடைய வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை முடித்தார்கள்.

இதோ சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம்.

sivakarthikeyan