டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இது தான்!! சிவகார்த்திகேயனே பதிவிட்ட ட்வீட்..

sivakarthikeyan2

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது டாக்டர் திரைப்படம் உருவாகி வருகிறது.

இத்திரைப்படத்தை நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்குகிறார். கே ஜி ஆர் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான  கே ஜே ஆர் இப்படத்தை   உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவர் பாடிய செல்லம்மா செல்லம்மா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்பொழுது படப்பிடிப்புகள் முடியும் நிலையில் இறுதிகட்ட பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தின் டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டரில் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டரில் மார்ச் 26 ஆம் தேதி தியேட்டரில் டாக்டர் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

sivakarthikeyan1
sivakarthikeyan1