அருண் விஜய் மீது இருந்த பகையை மறந்து சிவகார்த்திகேயன் போட்ட ட்வீட்.! ஆனாலும் பழசை மறக்காத ரசிகர்கள்…

arun-vijay
arun-vijay

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருகிறார் இவர் தற்போது டான் என்ற திரைப்படத்தில் நடித்துக் முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதேபோல் டான் திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி தான் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன் ஜெயசூர்யா சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை   சிவகார்த்திகேயன் புரடக்ஷன் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் அந்த ட்வீட் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

அதாவது அருண்விஜய் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையே மிகப்பெரிய மோதல்கள் இருந்தது சிவகார்த்திகேயனை மோசமாக விமர்சனம் செய்து வந்திருந்தார்கள்  இது குறித்து சிவகார்த்திகேயன் ரெமோ படத்தின் விழாவில் அழுதுகொண்டே கூறியிருந்தார். சீமராஜா திரைப்படம் வெளியான பொழுது நடிகர் அருண் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீ எல்லாம் ஒரு மாஸ் ஹீரோ.? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்தை இல்லாமல் போச்சு தமிழ் ஆடியன்ஸுக்கு தெரியும் திறமைக்கு மட்டுமேதான் மதிப்பு கொடுப்பார்கள் என பதிவிட்டிருந்தார்.

இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அருண் விஜய்யை மோசமாக கமெண்ட் செய்து தக்க பதிலடி கொடுத்தார்கள். இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய தீயாய் பரவியது  இந்த நிலையில் பழசை எல்லாம் மறந்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் அருண்விஜய் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அதாவது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி ஓ மை டாக்கில் உங்கள் நடிப்பு ரசித்தேன் தொடருங்கள் உங்கள் படிப்பு மற்றும் நடிப்பு வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.