தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர் இவர் முதன்முதலில் சின்னத்திரையில் கலந்துகொண்ட பிரபலமடைந்தவர் அதன்பிறகு சினிமாவில் கால் தடம் பதித்தார், மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை நன்றாக புரிந்து கொண்டு அதன் பாதையில் சென்று முன்னணி நடிகர் அந்தஸ்து பெற்றவர்.
அதேபோல் அப்படியே மக்களின் என்டர்டைன்மென்ட் ஹீரோவாக முன்னேறிய சிவகார்த்திகேயனுக்கு சமீபகாலமாக திரைப்படம் நன்றாக ஓடவில்லை, அதற்கு காரணம் என்டர்டைன்மென்ட் ஹீரோவாக நடிக்காமல் மாஸ் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசைதன் அதனால் மாஸ் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் மண்ணை கவ்வியது.
பொதுவாக நல்ல திரைப்படங்களை கொடுத்து வந்தாலே மாஸ் ஹீரோ என்ற பட்டம் மிக எளிதாக கிடைத்துவிடும் இதனை பல முன்னணி நடிகர்களும் நிரூபித்து உள்ளார்கள் ஆனால் கொஞ்சம் திரைப்படங்களிலேயே நடித்து விட்டு உடனடியாக மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு வளர்ந்து விட வேண்டும் என நினைத்தால் மண்ணை கவ்வி தானே ஆக வேண்டும்.
இப்படியே மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு படம் நடித்துக் கொண்டிருந்தால் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கை என்ன ஆகும் என்று தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த வருடம் பல சர்ச்சைகளை சந்தித்தது கதை திருட்டு என்ற சர்ச்சையுடன் வெளியாகிய ஹீரோ திரைப்படம் வெற்றி வெற்றி என கூறினார்கள். இந்த நிலையில் முதல் முறையாக சன் தொலைக்காட்சியில் ஹீரோ திரைப்படம் கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்டது ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்களுடன் கிடைக்கவில்லை.
இதற்கு முன் இரண்டாவது முறை ஒளிபரப்பப்பட்ட நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் கூட ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மக்கள் பார்த்த நிலையில் ஹீரோ திரைப்படம் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்ட போது 96 லட்சம் பிரீமியர் காட்சிகள் பார்க்க பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இப்படி தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் திரைப்படம் அடிவாங்குவது அவரின் சினிமா திரை பயணத்திற்கு நல்லதல்ல என கோலிவுட் வட்டாரத்தில் கூறி வருகிறார்கள்.