Shivakarthikeyan: சிவகார்த்திகேயன் ஷாருக்கானுக்காக எழுதிய கதையை தமிழில் சில மாற்றங்கள் செய்து நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தினை பிரபல இயக்குனர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக மாவீரன் திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டியது.
இதனை தொடர்ந்து அயலான் திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவலின் படி அயலான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது விரைவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான ஏ ஆர் முருகதாஸ் கஜினி படத்தை ஹிந்தியில் இயக்கினார் இந்த படம் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து தற்போது ஷாருக்கானுக்கு ஒரு கதை எழுத ஆனால் அந்த படம் உருவாகவில்லை என்பதனால் இந்த கதையை தான் தற்பொழுது தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி சிவகார்த்திகேயன் நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அப்படி இந்த கதையை சிவகார்த்திகேயனிடம் கூற அவரும் ஒப்புக்கொண்டதால் ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தின் படப்பிடிப்பினை வருகின்ற 2024ஆம் ஆண்டு தொடங்க முடிவெடுத்துள்ளாராம். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சீதாராமம் படத்தின் புகழ் மிருணாள் தாகூர் நடைபெறுவதாக தெரிகிறது.
இதனை அடுத்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறாராம். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான கத்தி, தர்பார் போன்ற படங்களுக்கும் அனிருத் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அப்டேட்டை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.