சினிமா உலகம் எப்படி என்பதை நன்கு புரிந்து கொண்டு பயணிக்கும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் பெரும்பாலான படங்கள் காமெடி சென்டிமென்ட் கலந்த படங்களாக இருப்பதால் ரசிகர்களையும் தாண்டி குடும்பம் இல்லதரசிகள் என கூட்டம் கூட்டமாக அவரது படத்தை பார்ப்பது வழக்கம்.
அதனால்தான் அவரது படங்கள் நல்ல வரவேற்பை பெறுவதோடு மட்டுமல்லாமல் அதிக வசூலை அள்ளி அசத்துகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் கடைசி படமான டாக்டர் படம் கூட நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி கிளப்பில் இணைந்து அசத்தியது அதனைத்தொடர்ந்து அட்லீயின் உதவி இயக்குனர் சிபிசக்கரவர்த்தி உடன் கைகோர்த்து நடித்த திரைப்படம் டான்.
இந்த படமும் எமோஷனல் ஆகவும் அதேசமயம் காமெடியும் சிறப்பாக இருந்ததால் படம் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 40 கோடிக்கு மேல் தாண்டி வசூலை அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறது உலக அளவில் டான் திரைப்படம் சுமார் 66 கோடி அள்ளி அசதி வெற்றிநடை கண்டு வருகிறது.
முதல் வாரம் முடிந்து இரண்டு மூன்று நாட்களில் நல்ல வசூலை அள்ளிய நிலையில் வருகின்ற நாட்களிலும் பிரம்மாண்டமான வசூலை தாண்டி புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது நிச்சயமாக டான் படம் 100 கோடி கிளப்பில் இணைவது உறுதி என படத்தை பார்த்த ரசிகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை கூறி வருகின்றனர்.
டாக்டர் டான் ஆகிய படங்கள் வெற்றியை பெற்றுள்ளது சிவகார்த்திகேயனுக்கு சற்று தெம்பை கொடுத்துள்ளதாகவும் இதனால் அடுத்த படமான அயலான் படத்தை இப்பொழுது ரிலீஸ் செய்தால் மிகப்பெரிய ஒரு இடத்தை பிடித்து விடலாம் என கணக்கும் போட்டுள்ளாராம்.