sivakarthikeyan : தமிழ்சினிமாவில் குறிப்பிட்ட சில வருடங்களிலேயே சில நடிகர்கள் மட்டும் தான் அதிக சம்பளம் வாங்கி வருகிறார்கள் அந்த வகையில் ரஜினி, கமல் விஜய், அஜித், சூர்யா அவர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் அதேபோல் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஸ்வரூபம் எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் முதன்முதலில் கலக்கபோவதுயாரு என்னும் காமெடி ஷோவில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக கலந்து கொண்டார், அதன் பிறகு அதே தொலைக்காட்சியில் சில நேரங்களில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் விஜய் தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் பெண்கள் மற்றும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்து வந்தது.
அப்படியே படிப்படியாக தமிழ் சினிமாவில் நுழைந்து விட்டார், சிவகார்த்திகேயன் ஆரம்பத்திலிருநது குழந்தைகளைக் கவர வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் அதனால் ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது அதன்பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் குடும்ப ரசிகர்களையும் கவர்ந்தது.
அப்படியே படிப்படியாக சிவகார்த்திகேயன் பெரிய ஹீரோவாக உயர்த்திட வேண்டும் என்ற நோக்கில் ஒரு தயாரிப்பாளர் செய்த காரியம் தான் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுப்பாக கிளம்பிவிட்டது, அதேபோல் சிவகார்த்திகேயனும் படத்திற்கு படம் ரசிகர் கூட்டத்தை சேர்த்துக்கொண்டே வந்தார். சிவகார்த்திகேயன் விருது விழாவில் பேசிய பொழுது தன்னுடைய தந்தையைப் பற்றி பேசி சிம்பதி கிரியேட் செய்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் கைக்குள் வைத்துக் கொண்டார் இதைப்பற்றி ரசிகர்கள் முணுமுணுத்தார்கள்.
இதைப் பார்த்த சிலர் முழுக்க முழுக்க இது சிவகார்த்திகேயனின் மாஸ்டர் பிளான் தான் என கூறினார்கள், அதனால் சிவகார்த்திகேயனுக்கு எதிராக பலரும் பேசினார்கள், அதேபோல் வாய்ப்பு கிடைக்கும் பொழுது சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை என ஒரு தரப்பு வாதம் கூறுகிறார்கள், இப்படி இருக்கையில் ரஜினி எப்படி விறுவிறுவென்று உயர்ந்த நிலையை அடைந்தார் அதேபோல் சிவகார்த்திகேயன் மிக மிக வேகமாக வளர்ந்து வருகிறார் என பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் சினிமாவில் சேர்ந்த ஒருவர் கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ஒரு சிலர் ரஜினியுடன் ஒப்பிட்டு பேசும் அளவிற்கு இன்னும் சிவகார்த்திகேயன் வளரவில்லை என கூருகிர்ரர்கள். அதேபோல் ரஜினி ரசிகர்களும் யாருடன் யாரை ஒபபிடுகிறார்கள் என வாக்குவாதம் செய்கிறார்கள், ஆனால் ரஜினி முதன் முதலில் நடிக்கும் பொழுது குழந்தைகளையும் குடும்பத்தையும் மொத்தமாக கவர்ந்தார் அதேபோல் சிவகார்த்திகேயனும் முயற்சி செய்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், அதேபோல் ரஜினி ஸ்டைலை அப்படியே காப்பி அடித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் சிவகார்த்திகேயன் மீது இருக்கிறது.
ரஜினி நடிப்பில் வெளியாகிய முள்ளும் மலரும் திரைப்படத்தை பார்த்தால் ஒரு சில விஷயங்கள் உங்களுக்கே புரியும்.