தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்பொழுது டாக்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படம் விரைவில் ஓடிடி வழியாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக இவரை பற்றிய சர்ச்சையான தகவல்கள் வெளிவருவது வழக்கமாக இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனரை அடிக்கடி சந்தித்து வருவதாகவும் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை இவர்தான் இயக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் அட்வான்ஸ்சாக பணம் கொடுத்து செய்துள்ளதாகவும். அதோடு இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு தொடர்ந்து ஐஸ் வைத்து வருகிறார் என்றும் கூறப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது சிவகார்த்திகேயன் தனுஷின் வளர்ச்சியை பார்த்து மிகவும் பொறாமை பிடிப்பதாக ஒரு சில கோலிவுட் வட்டாரங்கள் கூறிவருகிறார்கள். அந்த வகையில் தனுஷை பழி வாங்கும் எண்ணத்தில் சிவகார்த்திகேயன் தற்பொழுது பல கோடி பட்ஜெட்டில் நடித்து முன்னணி நடிகராக வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறாராம்.
இந்நிலையில் தற்பொழுது சிவகார்த்திகேயன் டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில காலங்களாக கோயம்புத்தூரில் நடைபெற்று முடிந்தது
இன்னும் இத்திரைப்படம் முழுமையாக முடிவதற்கு பத்து நாட்கள் மட்டுமே இருந்தால் போதும் என்று கூறி உள்ளார்கள் எனவே அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டது.
இப்படிப்பட்ட நிலையில்தான் சர்ச்சையான தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது புதுமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி முதலில் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமிடம் தான் சொன்னாராம்.
எனவே இத்திரைப்படத்தில் தனுஷ் தான் நடிக்க இருந்தாராம் இப்படிப்பட்ட நிலையில்தான் எப்படியோ சிவகார்த்திகேயனிடம் இந்தக் கதையைக் கூறி உள்ளார்கள் எனவே உடனே சிவகார்த்திகேயனும் ஓகே சொல்லிவிட்டாராம். இத்திரைப்படம் கல்லூரியில் கெத்தாக சுற்றிவரும் இளைஞர்களை மையமாக வைத்தும் அவர்கள் எவ்வளவு காமெடியாக கலாட்டா செய்வார்கள் என்பதை வைத்தும் இத்திரைப்படம் உருவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.