சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், காமெடியனாகவும் வெற்றி கண்ட சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் தடம் பதித்தார் அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நல்ல கதைகளை தேர்வு செய்து தனது கட்டின உழைப்பை வெளிப்படுத்தி அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார்.
அந்த வகையில் ரஜினிமுருகன், மான் கராத்தே, ரெமோ வேலைக்காரன் என அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற்றன அதனைத் தொடர்ந்து அண்மையில் கூட சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், டான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது. இதனால் அஜித், விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் தான்..
பலரும் சொல்லி வந்த நிலையில் கடந்த தீபாவளியை முன்னிட்டு இவர் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரிலீசானது இந்த படத்தை அனுதீப் இயக்கியிருந்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா படத்தை தயாரித்திருந்தது பெரிய அளவில் இந்த படம் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று வசூலில் மரண அடி வாங்கியது.
அதுவரை உச்சத்தில் தூக்கி வைத்து பேசப்பட்ட சிவகார்த்திகேயன் இந்த படத்தின் மூலம் அதல பாதாளத்திற்கு சென்றார். இந்த நிலையில் பிரின்ஸ் திரைப்படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பு நிறுவனம் சிவா வாங்கிய சம்பளத்தை திரும்ப தருமாறு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டாலும் இப்படி ஒரு சம்பவம் நடப்பது என்பது சிவாவின் சினிமா கேரியருக்கு பிரச்சனையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர அடுத்தடுத்த ஹிட் படத்தை சிவகார்த்திகேயன் கொடுத்தால் மட்டுமே வளர முடியும் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.