திடீரென.. அஜித்தை சந்தித்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் – இணையதளத்தில் பற்றி எரியும் புகைப்படம்.!

ajith

நடிகர் அஜித்குமார் மாஸ் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் வலிமை படத்தை தொடர்ந்து ஹச். வினோத்துடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து நடித்துள்ள திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது துணிவு படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது அஜித் இந்த படத்தில் புதிய லுக்கில் சூப்பராக நடித்திருக்கிறாராம்.

அவருடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பிக்பாஸ் பிரபலங்களான சிபி, அமீர் போன்றவர்களும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

படம் ரிலீசுக்கு முன்பாகவே ரசிகர்களை சந்தோஷப்படுத்த அஜித்தின் துணிவு படக்குழு அடுத்த அப்டேட்களை கொடுக்க இருக்கிறது ரசிகர்கள் தற்பொழுது எதிர்பார்த்து இருப்பது சில்லா சில்லா பாடலை தான்.  இதற்கான அப்டேட் டிசம்பர் மாதம் ஆரம்பத்தில் வெளியாகும் என சொல்லப்பட்டது.

இது இப்படி இருக்க அஜித் துணிவு  படத்தை தொடர்ந்து நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து AK 62 திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அஜித்துடன் லேட்டஸ்டாக புகைப்படம் எடுத்துக்கொண்டார் அதை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்டோம்..

எனக்கூறி சில பாசிட்டிவான வார்த்தைகளால் அஜித் சாரின் வாழ்த்து கிடைத்ததற்கு நன்றி என பதிவிட்டும் உள்ளார். இந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ சிவகார்த்திகேயன் மற்றும் அஜித் குமார் இணைந்து எடுத்துக் கொண்ட அந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

ajith
ajith